Navigation Bar என்பதையே ப்லொக்கரில் Nav Bar என்று சுருக்கமாக அழைக்கின்றோம். இந்த Navbar செய்யும் பணிகளை இப்போது பல Gadget செய்கின்றன. ஆனாலும் Navbar வலைப்பூக்களுக்கு மிகவும் உதவுகின்றது.இதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
* முதலாவது அமைக்கபட்டிருக்கும் Blogger Icon ப்லோக்கரின் முகப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இது புதிதாக வரும் பயனர்களுக்கு ப்லோக்கரை அறிமுகம் செய்துவைக்கும்.
* இரண்டாவது அமைக்கபட்டிருக்கும் Search Box எமது வலைப்பூக்களில் இருக்கும் பதிவுகளில் தேடுவதற்கு உதவுகின்றது.
* மூன்றாவது அமைக்கப்பட்டிருக்கும் Follower Link நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பூவின் Follower ஆக உதவுகின்றது. இதன் மூலம் அந்த வலைப்பூவில் Follower Gadget அமைக்கப்படாவிட்டாலும் இதன் மூலம் Follower ஆக முடியும்.
* நான்காவது அமைக்கப்பட்டிருக்கும் Share Button எமது பதிவுகளை Facebook,Twitter,Buzz,Orkut போன்ற தளங்களில் பகிர்வதற்கு உதவுகின்றது.
* ஐந்தாவது அமைக்கப்பட்டிருக்கும் Report Abuse Link எனும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பூ சம்பந்தமாக ப்லோக்கரிடம் முறையிட உதவுகின்றது. (எமது தளங்களை பிறர் பாவிக்கும் பொழுது எம்மால் எமது தளத்தில் நுழைய முடியாது. அப்போது இதனை பாவித்து ப்லோக்கரிடம் முறையிட முடியும்.)
* ஆறவது இருக்கும் Next Blog எமக்கு அடுத்த படியாக இருக்கும் வலைப்பூவை காண உதவும்.
* அடுத்து நாம் ஜீமெயிலில் Sign in ஆகி இருந்தால் எமது முகவரி காட்டப்படும்.
அதனைக்கொண்டு அடுத்து அமைக்கப் பட்டிருக்கும் Dash Board லின்கை Click செய்து எமது Dash போர்ட்டுக்கு செல்ல முடியும் . அடுத்து காணப்படும் Sign In/Sign Out பயன் படுத்தி ப்லோக்கரில் உள்நுழையவும் வெளியேறவும் முடியும்.
Tuesday, July 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment